பெரு நாட்டில் பயணிகள் பேருந்து கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு

பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லொறி, பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 39 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !