பெரும் பான்மையைப் பெற்றது கொன்சர் வேற்றிவ் கட்சி
சற்றுமுன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 648 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி கொன்சர்வேற்றிவ் கட்சி 363 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்கட்சி 203 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியை விட கொன்சர்வேற்றிவ் கட்சி 160 ஆசனங்கள் முன்னிலையில் உள்ளது.
இதுவரை கொன்சர்வேற்றிவ் கட்சி 348 ஆசனங்கள்
சற்றுமுன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 627 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி கொன்சர்வேற்றிவ் கட்சி 348 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்கட்சி 202 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியை விட கொன்சர்வேற்றிவ் கட்சி 146 ஆசனங்கள் முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மையைப் பெற்றது கொன்சர்வேற்றிவ் கட்சி
பிரித்தானியப் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும் எண்ணிக்கையிலான ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 605 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் கொன்சர்வேற்றிவ் கட்சி 333 ஆசனங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கப் போதுமான ஆசனங்கள் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றில் 650 உறுப்பினர் ஆசனங்கள் உள்ள நிலையில் ஒரு கட்சி 326 இடங்களை வென்றால் அதனை உறுதிப்படுத்த முடியும்.
இதேவேளை, இந்த தேர்தலில் ஸ்கொற்லாந்து தேசிய கட்சி (Scottish National Party) இதுவரை 45 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் லிபெரல் கட்சி (Liberal Democrats) இதுவரை 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.