Main Menu

பெரும்பான்மையினத்தவர் பின்பற்றும் பௌத்த மதத்தின் தோற்றுவாய் இந்தியாவாகும் : ராஜித

இந்தியாவிலிருந்து மஹிந்த தேரர் மூலம் தான் இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இன்று இலங்கையின் பெரும்பான்மை இனமாக விளங்கும் சிங்களவர்களின் தோற்றுவாய் இந்தியாவையே சார்ந்திருக்கின்றது.

வரலாற்று ரீதியாக இருநாடுகளுக்கும் இடையில் நெடுங்காலத்தொடர்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.அவ்வுறவு மேலும் பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து முன்நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை முஸ்லிம் மீடியா போரம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் இலங்கை – இந்திய நட்புறவு ஒருமைப்பாட்டு சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.