பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவதற்கான சுற்று நிருபம் வெளியீடு
சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடிவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
பொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.
ஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.