பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31 ஆயிரத்து 343 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பெப்ரவரி மாதத்திற்கான வருகை விகிதம் நாளாந்தம் 3 ஆயிரத்து 134 ஆகக் காணப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவில் இருந்தே 4 ஆயிரத்து 566 பார்வையாளர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், 3 ஆயிரத்து 799 பயணிகளின் வருகையுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 3 ஆயிரத்து 575 பயணிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.