பெண் பேருந்து சாரதியின் மனிதாபிமான செயல்!

அமெரிக்காவின் வின்கோன்ஸின்னில் உள்ள மிகப் பெரிய நகர் ஒன்றில் வீதியில் அநாதரவாக சென்ற குழந்தையொன்றை பெண் பேருந்து சாரதியொருவர் உடனடியாக ஓடிச் சென்று பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

மில்வாவ்கீ கவுண்டியில் பேருந்து சாரதியாக பணியாற்றும் பெண்ணொருவர் பாலம் ஒன்றை கடந்து சென்ற போது சிறு பெண் குழந்தையொன்று வீதியை கடக்க முற்படுவதை அவதானித்துள்ளார்.

ஐரினா இவிக் என்று குறித்த பெண் சாரதியின் துணிகரச் செயலை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த மாதயிறுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குழந்தை மீட்கப்பட்ட பின்னர் பொலிஸ் மீட்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடனடியாக அங்கு சென்ற பொலிஸாரும், தீயணைப்பு அதிகாரிகளும் சாரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

கடும் குளிரான காலநிலை நிலவியதன் காரணமாக அந்த குழந்தை மிக நீண்ட நேரம் வௌியில் குளிரால் வாடியது. குழந்தை மீட்கப்பட்ட பின்னர், பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் அதற்கு மேலாடை ஒன்றை வழங்கிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்த குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட தாயொருவரினால் அஜாக்கிரரையாக விடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், அதனை தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !