பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாகவும், காஷ்மீர் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்றும், பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காஷ்மீர் பகுதியில் கடந்த ஜனவரி 10ஆம் திகதி எட்டு வயது சிறுமியொருவர் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கில் பா.ஜ.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் கொலை மற்றும் ஏற்கனவே நடந்தேறிய பெண்கள் வன்முறை விடயத்தில் நீதி வேண்டும் எனக் கூறியும், டெல்லியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !