பெண்கள் துன்புறுத்தப் படுவதை வேடிக்கை பார்க்க முடியாது: நீதிபதி

சடங்கு என்னும் பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை சகித்து கொள்ள முடியாதென, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த பெண்னொருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவர் நல்லிரவில் தொப்பூர் அணைக்கு அழைத்து செல்லப்பட்டு வன்முறைக்கு உட்படுத்துப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை நேற்று (செவ்வாய்க்கிழ,மை) அறிவிக்கும் போதே, நீதிபதி மேற்படி கூறினார்.

மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு பிறப்பித்த நீதிபதி, சடங்கு என்னும் பெயரில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.

அத்துடன் இவ்வாறான செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனணகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அதே சமயம் சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆவதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களாக இருப்பதாலும், ஏற்கனவே அவர்கள் அனுபவித்த தண்டனைகளே போதுமெனக் கூறிய நீதிபதி, ஒருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

குறித்த தொகையை எட்டு வாரங்களில் தர்மபுரி நீதிமன்றில் செலுத்தவும், அதை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !