பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவம்: ஜனாதிபதி மக்ரோன் விளக்கம்

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உரையாற்றியுள்ளார்.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சாட் நாட்டிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மக்ரோன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெண்கள் குழுவினருக்கு மத்தியில் உரையாற்றினார்.

ஐரோப்பாவில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென்ற கருத்து, தான் ஆட்சிப்பொறுப்பேற்ற ஆரம்பத்தில் காணப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். ஆனால், அவ்வாறான நிலை இல்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி மக்ரோன், பிறப்பு வீதம் நிலையான தன்மையில் இல்லாமையே பாதகமான செயற்பாடாகுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்களின் கல்வியறிவு 54 சதவீதமாக உள்ளபோதும், பெண்களில் கல்வியறிவு 22 சதவீதத்திலேயே காணப்படுகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்யும் பெண்களின் வீதம் 70ஆக காணப்படுகின்றதென்றும் குறிப்பிட்டார்.

இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு பாலின சமத்துவம் ஏற்படுத்தப்படுவது அவசியமென குறிப்பிட்டார். பெண்களே வெற்றி, சுதந்திரம், அறிவு ஆகியவற்றின் இதயமாக காணப்படுவதாகவும் மக்ரோன் இதன்போது கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சாட் நாட்டிற்கு இமானுவேல் மக்ரோன் மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !