பெண்களின் பின்னால் சென்று அவர்களின் செல்போன் எண்களை கேட்பது குற்றமாக்கப்பட வேண்டும்-Marlene Schiappa

பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் இளம்பெண்களிடம் அத்துமீறி செயல்படும் வாலிபர்களுக்கு அதே இடத்தில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானின் அமைச்சரவையில் Marlene Schiappa(34) என்பவர் இளம் பெண் அரசியல்வாதி மட்டுமின்றி தற்போது பாலின சமத்துவ அமைச்சராகவும்(Gender Equality Minister) பதவி வகித்து வருகிறார்.

சிறு வயதில் பாரீஸ் நகரில் வலம் வந்தபோது வாலிபர்களின் அத்துமீறலான செயல்களில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

’பெண்கள் மீதான இப்பாலின தாக்குதலுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்’ என சிறு வயதிலேயே தீர்மானித்துள்ளார்.

பின்னர், அரசியலில் ஈடுப்பாட்டுடன் செயல்பட்ட அவர் தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பெண் அமைச்சர் பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறி செயல்படும் ஆண்களுக்கு அதே இடத்தில் ஆயிரக்கணக்கான யூரோவை அபராதமாக விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

‘பொது இடங்களுக்கு செல்லும் பெண்களின் பின்னால் சென்று 10 முறை வலியுறுத்தி அவர்களின் செல்போன் எண்களை கேட்பது குற்றமாக்கப்பட வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், பெண்களின் விருப்பத்தற்கு எதிராக எச்செயலை செய்தாலும் அந்த ஆண்களை அதே இடத்தில் பொலிசார் தண்டிக்க வேண்டும்.

இதுபோன்ற ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை ஒடுக்க முடியும்.

இந்த புதிய சட்டம் தொடர்பாக அமைச்சரவை முன்னிலையில் விரைவில் வலிறுத்தவுள்ளதாக Marlene Schiappa தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !