பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா!
பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.
அ.தி.மு.க கொடியை பயன்படுத்தக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...