பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விராட் கோலி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை எடுத்திருநதது.
இதையடுத்து 174 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் இலக்கினை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியைப்பதிவு செய்துள்ளது.