PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!
பத்மா சேஷாத்ரி பாடசாலை (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறய விவகாரம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
முன்னரே முறைப்பாடு அளித்தும் பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு கல்வி நிறுவனங்களின் மீதனா நம்பிக்கையை குலைக்கிறது.
இந்த விவகாரம் வெளியாகியதை அடுத்து வேறு சில பாடசாலைகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழக அரசு உடனடியாக பிரத்தியேக விசாரணைக் குழுவினை அமைந்து போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும். ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலநாட்ட வேண்டும்’ எனத் தெரிவித்தள்ளார்.