புளோரிடாவை தாக்கியது சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி: 4 ஆயிரம் பேர் மீட்பு பணியில்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடமேற்கு பகுதியை மிகவும் சக்திவாய்ந்த மைக்கேல் சூறாவளி தாக்கியுள்ளது.

புளோரிடா மாநிலம் இதுவரை அனுபவித்திராத வகையில் நேற்று (புதன்கிழமை) மாலை தாக்கிய கடும் சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பல வீடுகளும் சேதமாக்கப்பப்பட்டுள்ளன.

புளோரிடா மாநிலத்தின் பன்ஹன்டில் பிராந்தியத்தில் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் கடும் புயல் தாக்கியுள்ளது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக புளோரிடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புயல் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்காக 3 ஆயிரத்து 500 புளோரிடா தேசிய பாதுகாப்பு படையினரும், ஆயிரம் மீட்பு பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புளோரிடா ஆளுநர் றிக் ஸ்கொட் தெரிவித்தார்.

இதேவேளை, புளோரிடா மாநிலம் முழுவதிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புளோரிடாவை கால் நூற்றாண்டுக்கு பின்னர் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாகவும், அமெரிக்க பிரதான நிலப்பரப்பை தாக்கிய மூன்றாவது மிக சக்திவாய்ந்த சூறாவளியாகவும் இந்த மைக்கேல் சூறாவளி விளங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !