புல்வாமா தாக்குதல் பின்ணனியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு – இந்தியா குற்றச்சாட்டு!

ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பு தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயர்மட்ட இராணுவத்தளபதி ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளான அப்துல் ரஷீத் காஜி மற்றும் ஹிலால் ஆகியோருக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் குறித்த அமைப்பினை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பே கட்டுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஏராளமான முதலீடுகளை செய்து பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா செயற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் குறித்த திட்டங்களை  சீர்குலைக்கும் விதமாகவே குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவத்தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா பகுதியில்  சி.ஆர்.பி.எஸ் வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த  தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்கக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !