லண்டன் விமான நிலையத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் கைதாகி விடுதலை

லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கைத் தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவிற்கு செல்லயிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

36 வயதான வாகீசன் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்குச் சென்றபோதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !