புலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்டில் குறித்த ஆவணங்களை வெளியிட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி இருந்தேன்.

ஆனால் புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தவறானது” என தெரிவித்துள்ளார்,


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !