புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம்.
எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் பல்வேறு வகையிலும் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதீக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர்.
புலம் பெயர்ந்த எம் உறவுகள் தனித்து பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஈழத்தமிழ் உறவுகளுக்கு பாரிய உதவிகளை வழங்கிய புலம் பெயர்ந்த எம் உறவுகள் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பலர் உயிரிழந்த போதும், ஆயிரக்கணக்கான எம் உறவுகள் பாதீக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த எம் உறவுகளுக்கு இதய அஞ்சலியை செலுத்துவதோடு, பாதீக்கப்பட்ட உறவுகள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இலங்கை அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு வகையில் குரல் கொடுத்து அழுத்தங்களை பிரையோகித்து வர்தவர்கள் எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்.
புலம் பெயர்ந்த சமூகத்தின் பலம் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் குறைவடைந்து வருகின்றது. எனவே புலம் பெயர்ந்த உறவுகள் முடிந்த அளவு தமது வீடுகளில் இருந்து உயிரை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம்.எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.