புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் – சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஓமந்தை மருதோடை, நாம்பன்குளம்,
அலைகல்லுபோட்டகுளம், கொந்தக்காரக்குளம், வேப்பங்குளம், ஆச்சிபுரம்
ஆனந்தபுரம், பூவரசங்குளம் கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள
நிவாரணங்களை வழங்கியுள்ளார்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிப்பிரிவின் ஒழுங்கமைப்பில்,
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி (பார்வை பத்திரிகை ஆசிரியர்), லண்டனைச்சேர்ந்த
திரு.சுந்தர், சுவிஸ் கதிரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரின்
நிதிப்பங்களிப்பில் குறித்த கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்
வழங்கி வைக்கப்பட்டன.
ஆனந்தன் எம்.பியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா,
ம.தியாகராசா ஆகியோரும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.
பகிரவும்...