புலம்பெயர்ந்தோர் பாதிக்கப் பட்டவர்களை கண்டு கொள்வதில்லை: சிவாஜிலிங்கம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு புலம்பெயர் உறவுகள் தவறுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது தமிழ் உறவுகளுக்காக ஜெனீவாவில் குரல் கொடுக்க செல்லும் எம்மை புலம்பெயர் அமைப்புகள் கண்டுக் கொள்வதில்லை.

தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு செல்லும் எமக்கும் எவ்வித அனுசரணையும் கிடைப்பதில்லை. கடன்பட்டே நாம் அங்கு செல்ல வேண்டியுள்ளது.

அதுமாத்திரமின்றி ஒரு சிலரை தவிர பாதிக்கப்பட்டவர்களை கண்டுக்கொள்ளவும் அவர்கள் தவறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !