புற்று நோய் பாதிப்பு: நவாஸ் செரீப் மனைவிக்கு மீண்டும் ஆபரேசன்

ஊழல் வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ்.

பதவி பறிக்கப்பட்டதால் காலியாக உள்ள கணவர் நவாஸ் செரீப்பின் தொகுதியான லாகூர் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதற்கான வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு தொண்டை புற்று நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. அதற்காக அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு அவருக்கு கடந்த வாரம் ஆபரேசன் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஆபரேசன் நடத்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதை ஏற்று நேற்று அவருக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது.

அவருடன் கணவர் நவாஸ் செரீப் மற்றும் அவரது மகன்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சையை கவனித்து வருகின்றனர். இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தை நவாஸ்செரீப் கட்சியின் நிர்வாகிகளும், மந்திரிகளும் கவனித்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !