“ புரட்சித் தலைவனின் பிறந்தநாள் நினைவுக்கவி “

மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட
மக்களின் இதயத்தில் இடம் பிடித்த
புரட்சித் தலைவனை
பிறந்த நன்நாளாம்
தைத்திங்கள் பதினேழில்
நினைத்திடுவோம் வாழ்த்திடுவோம் !

இமயம் போன்ற அவரின் இதயம்
ஏழை எளியோரையே தாங்கி நின்றது
ஏழை மக்களை நேசித்தார்
மக்கள் ஆட்சியை ஆதரித்தார்
மனித நேயம் காத்த
மனிதாபிமானத்தின் சிகரத்தை
இன்நாளில் நினைத்திடுவோம்
இதயத்தால் வாழ்த்திடுவோம் !

சத்துணவுத் திட்டத்தை அமுலாக்கிய
சரித்திர நாயகனை
பல்கலைக் கழகங்களை உருவாக்கி
கல்விக் கண்ணைத் திறந்த சாதனையாளனை
இன்நாளில் நினைத்திடுவோம்
இதயத்தால் வாழ்த்திடுவோம் !

சரித்திர நாயகனை சாதனையாளனை
வாரி வழங்கிய வள்ளலை
காவியம் படைத்த காவியத்தலைவனை
புரட்சிகள் செய்த புரட்சித் தலைவனை
மூன்றெழுத்து மந்திரத்தை
இன்நாளில் நினைத்திடுவோம்
இதயத்தால் வாழ்த்திடுவோம் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 17.01.2019


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !