“ புத்தாண்டு சிறப்புக்கவி “ (01.01.2019)

அகிலமே கொண்டாடும்
ஆங்கிலப் புத்தாண்டு 2019
ஆரவாரம் பொங்க
ஆலய மணிகள் ஒலிக்க
வாண வேடிக்கைகள் முழங்க
வர்ண ஜாலங்கள் ஜொலிக்க
விண்ணிலே ஒளியாகி
கண்ணுக்கு விருந்தாகி
மண்ணிலே உதித்ததே
மகிழ்வான புத்தாண்டு !

பொழுதும் விடிந்தது
புத்தாண்டும் மலர்ந்தது
புத்துணர்ச்சி பிறந்தது
மனங்கள் குளிர்ந்தது
மகிழ்வையும் தந்தது
மகத்துவமான புத்தாண்டு !

மண்ணில் மனிதம் மலரட்டும்
கண்ணில் நல்லொளியும் வீசட்டும்
விண்ணும் வியந்து பார்க்கட்டும்
பண்ணும் பாட்டும் இசைக்கட்டும்
புத்தாண்டும் களைகட்டட்டும் !

புத்தாண்டு தினமதில்
புதிய சிந்தனைகளோடு
புரிதல் உணர்வோடு
பாரினில் உயிர்களை
வாரி அணைப்போம்
வாழும் வரைக்கும்
உறவுப்பாலம் அமைப்போம்
உறவுகள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !