புத்தாண்டு இரவில் பிரான்சில் அதிகரிக்கப்படும் வீதிப்பாதுகாப்பு!

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கும் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட அதிகாலைப் பொழுதில் பிரான்சில் வீதிப்பாதுகாப்பும், சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ற்கு 4 பிரான்ஸ் மக்கள் இரவுக் கொண்டாட்டங்களின் பின்னர் அதிகாலைக்கு முன்னர் வீடு திரும்புவதுடன், பெரும்பாலானோர் அதிகம் மது அருந்தியிருப்பார்கள் என்று சாரதிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொதுநலச் சங்கமான இணைந்த அணுகுமுறை தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல் மற்றும் கட்டுப்பாடற்ற வேகம் ஆகியவற்றால் ஏற்படும் உயிராபத்து பற்றிய பிரசாரங்களை வீதிப்பாதுகாப்பு அமைச்சு பெருமளவில் மேற்கொண்டிருந்த போதும், அது இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

பலரின் வழக்கமாக உள்ள மது அருந்திவிட்டு 4 குவளை கோப்பி அருந்துவதோ அல்லது ஒரு லீட்டர் தண்ணீர் அருந்துவதோ மதுவின் அளவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், வாகனம் செலுத்தினால் உயிராபத்தை ஏற்படுத்தும் என்று அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கியமாக புத்தாண்டு இரவில் பல விபத்துக்களும் உயிரிழப்புகளும் இதனாலேயே ஏற்படுகின்றன என்பதையும் வீதிபாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !