புத்தரை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்ததாக நடிகை கைது!

புத்தரை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த சிறீலங்காவின்  பிரபல சிங்கள நடிகை ஒருவர் இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பிரபலமாக பேசப்பட்ட “ஹிரு பொத வெச்சே” திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த நடிகையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் குறித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தர் உருவப்படங்களை கொண்ட ஆடை அணிந்திருந்தமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தர் சிலையை உடம்பில் பச்சை குத்திய மற்றும் இவ்வாறான உடை அணிந்தவர்களை கைது செய்வதற்கு காவல் துறையினர்   நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நடிகையும் புத்தரை அவமதிக்கும் செயலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !