புதுவருடத்தின் முதல் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு
புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று(புதன்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலாளர் ஐ. எம். ஹனீபா தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சத்தியப்பிரமாண நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் அனைத்து கிளை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மாவட்ட செயலக முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வில் சத்தியப்பிpரமாணம் செய்து கொண்ட அரச உத்தியோகத்தர்கள் மரக்கன்றுகளையும் நாட்டியிருந்தனர்.
பகிரவும்...