புதுக்கோட்டையில் விபத்து – 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டையில் வேனும், கொள்கலனும் மோதிக்கொண்டதில் 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வேனில் திரும்பிக்கொண்டிருந்த வேளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே,  திருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், வேன் மீது எதிரே வந்த கொள்கலன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 6 பேர்  அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !