Main Menu

புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லாஹ்

ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
தொடர்ச்சியான தாக்குதல்களில் அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், உயிருடன் இருக்கும் சில சிரேஷ்ட ஹெஸ்புல்லாஹ் தலைவர்களில் நைம் காசிமும் ஒருவராவார்.
லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பில் புதிய தலைவர் பெயரிடப்பட்டுள்ளார்.
எனினும், அவர் இருக்கும் இடம் தொடர்பான தெளிவான தகவல் தெரியவில்லை எனவும், அவர் ஈரானுக்குத் தப்பிச் சென்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...
0Shares