புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும் எவரும், இந்த சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்று அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா 500,000 க்கும் அதிகமான தொற்று நோயாளிகளை பதிவு செய்துள்ளது, இது பிரேசில் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கொண்டுள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.