புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை!

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல் உறுப்பினர் டி.சேகரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கலுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால் காற்றில் மாசு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையை மாற்ற இரசாயனம் அல்லாத காற்றில் மாசு படாத அளவுக்கு பண்டிகை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. போகி பண்டிகையன்று தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகைக்காரணமாக விமானங்கள் தங்களது பயணங்களை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் மட்டும் 16 விமானங்கள் காலதாமதம் ஏற்பட்டு சென்று கொண்டுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பழைய பிளாஸ்டிக் பொருள், டயர், டியூப் போன்றவைகளை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகளும் புகையினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !