புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட தலைக்கூண்டு அணிந்த துருக்கியர்

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட, துருக்கி நாட்டவரான இப்ராகிம் யூசெல், தலையில் கூண்டு மாட்டியுள்ள போட்டோ, சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

42 வயதான இப்ராகிம் யூசெல், தினமும் 2 பாக்கெட் சிகரெட்களை புகைத்து வந்துள்ளார். அவருடைய தந்தை சமீபத்தில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம், யூசெல்லை கடுமையாக பாதித்தது. தந்தையின் மரணத்திற்கு காரணமான புகைப்பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட யூசெல் தீர்மானித்தார். ஆனால், யூசெல், எவ்வளவு முயன்றும் அவரால், புகைப்பழக்கத்தை கைவிட முடியவில்லை

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்த யூசெல், மனைவியின் உதவியுடன் தலையில் கூண்டை மாட்டிக்கொண்டார். உணவு சாப்பிடும்போது மட்டும், மனைவி, கூண்டை திறந்துவிடுவார்.

தலைக்கூண்டை யூசெல்லிற்கு மனைவி மாட்டிவிடுவது மற்றும் தலைக்கூண்டுடன் யூசெல் போட்டோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !