புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala-2019
புகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும், மாடல்களும், பாடகிகளும் கண்ணைக் கவரும் மாறுபட்ட உடைகளில் வந்து அசத்தினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் Met Gala ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சி நடைபெறும். மே மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாலிவுட் திரையுலகின் பிரபலங்கள், பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள், மாடல் அழகிகள், தொலைக்காட்சித் தொடர் நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் என பலர் வித விதமான ஆடை அலங்காரங்களில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனசுடன் Met Gala சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார்.
தீபிகா படுகோனும் இளஞ்சிவப்பு நிற ball gown உடையில் கலந்து கொண்டார்.
மேலை நாடுகளில் புகழ்பெற்ற பாடகி லேடி காகா ((Lady Gaga)) 4 வகையான உடைகளில் வந்து அசத்தினார்.
மாடல் அழகிகளும் சகோதரிகளுமான கெண்டல் ((Kendall)) மற்றும் கைலி ஜென்னர் ((Kylie Jenner)) ஆடை அலங்காரம் கண் கவரும் வகையில் அமைந்திருந்தது.
கனடா நாட்டு பாடகி செலின் டியோன் ((Celine Dion))மின்னும் உடையில் தோன்றினார்.
அமெரிக்க பாடகியும் மாடல் அழகியுமான கார்டி பி ((Cardi B)) 10 அடி நீள உடை அணிந்து வந்தார்.
பாடகியும் மாடல் அழகியுமான சியரா இறகு அலங்கார உடை அணிந்து தோன்றினார்.
6 கிராமி விருதுகளை வென்றுள்ள பாடகி கேசி முர்கவேஸ் ((Kacey Musgraves)) மோட்டார் சைக்கிள் கவுன் அணிந்து வந்தார்.
மேடைக் கலைஞரும் பாப் பாடகருமான பில்லி போர்ட்டர் ((Billy porter)) 10 அடி நீள தங்க நிற இறக்கைகளுடன் கூடிய உடையை அணிந்து வந்து அசத்தினார்.
கென்யா வம்சாவளியை சேர்ந்த மெக்சிக்கோ நடிகை லுப்பிட்டா நியோங்கோவின் கண்கவர் உடை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
நடிகை சயோர்ஸ் ரோனன், மாறுபட்ட எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஆடை அணிந்து வந்து அசத்தினார்.
நடிகையும் மாடலுமான எமிலி ரடஜ்கோவ்ஸ்கி ((Emily Ratajkowski)), கண்கவர் ஆடை அலங்காரத்துடன் பங்கேற்றார்.