Main Menu

புகழ்ந்து பேசும் நண்பர்களுக்கு பயந்தே இருங்கள் – ராதிகா

நடிகை ராதிகா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் எதிரிகள் உங்களை தாக்குவதை பற்றி பயப்பட வேண்டாம். ஆனால் உங்களை புகழ்ந்து பேசும் நண்பர்களிடம் பயந்தே இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் மற்றும் தத்துவஞானியான டேல் கார்னகி இளைஞர்களுக்கு தெரிவித்த இந்த கருத்தை தற்போது ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்மை  குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றுவரை நீடித்து நிலைத்து நிற்கும் நடிகை ராதிகா அண்மையில் சினிமா துறையில் 42 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.