புகலிடக் கோரிக்கை யாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

துருக்கியின் மேற்குக் கடற்கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தில் 25 பேரை காணவில்லையென துருக்கி கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு எங்கிருந்து வந்தது என எவ்வித தகவல்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த படகில் 35 பேர்வரை இருந்திருக்கலாமென தெரிவிக்கும் கடலோரக் காவற்படையினர், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் வறுமை மற்றும் அமைதியின்மை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் மூன்று மில்லியன் சிரிய அகதிகள் மற்றும் 3 இலட்சம் ஈராக்கியர்கள் புகலிட கோரி கடல் வழியாக பயணிக்கின்றனர்.

புகலிகட் கோரிக்கையாளர்கள் நுழையும் பிரதான கடல் மார்க்கங்களில் துருக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !