பிளே ஸ்டோரில் போலி வாட்ஸ்அப்

பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் போலி பதிப்பு வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். பிளே ஸ்டோரில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு போலி செயலிகள் கிடைக்கின்றன. அவ்வாறு இம்முறை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாட்ஸ்அப் சார்பில் பிஸ்னஸ் பதிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அப்டேட் வாட்ஸ்அப் மெசன்ஜர் என்ற பெயரில் பிளே ஸ்டோரில் போலி செயலி கிடைப்பதாக முதற்கட்டமாக டுவிட்டரில் தகவல் வெளியானது. வாட்ஸ்அப் இன்க் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போலி செயலி இதுவரை சுமார் 5000க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். மற்றொரு போலி செயலியை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் பதிப்பு சோதனை செய்யப்படுவதை வாட்ஸ்அப் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த செயலி வியாபாரம் செய்வோருக்கு வாட்ஸ்அப் மூலம் மற்றவர்ளுடன் தொடர்பு கொள்ள வழி செய்யும். வரும் மாதங்களில் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக அவற்றை பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட இருப்பதாக வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலி உலகின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் முடங்கிபோனது. சரியான காரணம் அறியப்படாத நிலையில், சில மணி நேரங்களில் செயலி மீண்டும் வேலை செய்தது. உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அனைவருக்கும் அழிக்கும் வசதி வழங்கப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !