பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் அங்குள்ள 300 இற்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அத்துடன், ஒரு இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அதிகளவான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அதிகளவான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !