Main Menu

பிலிப்பைன்ஸ் பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக பிலிப்பைன்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தினை அடுத்து குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 100 கி.மீ (62 மைல்) சுபிக்-கிளார்க்-டார்லாக் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் பெரும்பாலும் மணிலாவிற்கும் சுற்றியுள்ள மாகாணங்களுக்கும் இடையே தொழிலாளர்களை ஏற்றிச் செல்கின்றன.

வியாழக்கிழமை (01) குடும்பங்கள் தொழிலாளர் தினத்திற்காகப் பயணம் செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

பகிரவும்...
0Shares