Main Menu

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!

பிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படாடாவில் உள்ள தெற்கு வர்த்தக வணிகவாளக இடிபாடுகளில் ஐந்து பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) மீட்புக் குழுவினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்து விட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிலிப்பின்ஸின் மிண்டனாவோ தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறுவயது சிறுமி, இரண்டு பெண்கள் என மூவர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

முக்கிய நகரமான டவாவோ நகருக்கு 90 கி.மீ. தொலைவில், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 அலகுகளாகப் பதிவானது.

நிலநடுக்க மையத்துக்கு அருகேயுள்ள படாடா நகரில் சந்தைக் கட்டம் இடிந்து விழுந்தது. இதுதவிர, தெற்கு பிலிப்பின்ஸின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.