பிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)

சுவிஸ் பேர்ன் மாநகரில் வசிக்கும் மோகன் சொரூபி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி செல்வி. துஷாலா 6ம் திகதி ஒக்டோபர் மாதம் வியாழக்கிழமை அன்று வந்த 23 வது பிறந்த நாளையும், கனிஷ்ட புதல்வி செல்வி. துஷ்மிலா 28ம் திகதி நவம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று 22வது பிறந்த நாளையும், தமது இல்லத்தில் இணைந்து கொண்டாடுகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் அன்பு சகோதரிகள் துஷாலா, துஷ்மிலாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் துஷாலா & துஷ்மிலா சகோதரிகள் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க வாழ்கவென TRT தமிழ்ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர் மோகன் சொரூபி தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்!
அகவை திருநாளில் வாழ்த்துகின்றோம் !
பிறந்திருக்கும் இன்றைய நன்னாளில்
புதிய அகவையில் நுழைகின்ற
செல்விகள் மோகன் துஷாலா மோகன் துஷ்மிலா
இருவரையும் பல்லாண்டு காலம்
சீரோடும் சிறப்போடும்
இறை நல்லாசிகள் பெற்று
நலம் வாழ வேண்டுகின்றோம்!
அன்பு நிறைந்த இன்ப திருநாளில்
பருவகால ஆராதனை பூக்களால்
அழகிய மாலை தொடுத்து
உங்கள் இதய வாசல்களுக்கு சூடுகின்றோம்
வாழ்க பிள்ளைச் செல்வங்களே!
வாழ்த்தும் உறவுகள்

பகிரவும்...