பிறந்த நாளுக்கு ஏழை மக்களுக்கு உதவுங்கள்: மு.க.ஸ்டாலின்

தனது பிறந்த நாளை கொண்டாடுவதை விடுத்து, ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்களென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“என்னுடைய பிறந்தநாள் மார்ச் 1ஆம் திகதியாகும். இதனை கொண்டாடுவதற்கு பலரும் விரும்புகின்றனர். ஆனால் சிறப்பாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை.

மேலும் ஆடம்பர விழாக்களுக்காக செலவிடும் பணத்தை, ஏழை மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குவது சிறந்ததாகும்.

இதேவேளை என்னை பொது வாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தி.மு.க.வின் முன்னாள் தலைவரும் தந்தையுமான கருணாநிதி இல்லாத நிலையில், பிறந்தநாளைக் சிறப்பிக்க சிறிதளவும் விருப்பமில்லை

ஆகையால் பிறந்தநாளை கொண்டாடுவது பயனற்றது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !