பிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்

பிரேஸிலில் உள்ள தேவாலயத்தில் திடீரென துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கேம்பினாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு இடம்பெறுக்கொண்டிருந்த வெளியிலேயே குறித்த நபர் தான் மறைத்து வைத்திருந்த இரு துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்துடன் மேலும் 4 பேர் காயமடைந்திருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிஸார் அவனை சுற்றிவளைத்த போது குறித்த நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் அவர் 49 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !