பிரேசிலில் விபத்து- பஸ் கவிழ்ந்து கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி
பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் திரண்டனர். போட்டி முடிந்ததும் ஒரு பஸ்சில் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். அந்த பஸ்சில் 40 ரசிகர்கள் பயணம் செய்தனர். பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.