பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானிய நாடாளுமன்ற வாக்கெடுப்பை தொடர்ந்து முறையற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமது நோக்கத்தை வெகு விரைவில் தெளிவுபடுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான காலம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அவர் பிரித்தானியாவை எச்சரித்தார்.

இதேவேளை, தமது அணுகுமுறை குறித்து தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரித்தானியா காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்ஸிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டம் குறித்து அறிவிக்கும் பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது எனத் தெரிவித்த அவர், ஒன்றுபட்ட ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !