பிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை: ஜேர்மன் அமைச்சர்

முறையற்ற பிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என, ஜேர்மன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முறையற்ற பிரெக்ஸிற்றின் எதிர்மறையான விளைவுகள் காரணமாக வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்த கவலை எழுந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்த பொருளாதார அறிக்கையை நேற்று (புதன்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உடன்பாடற்ற பிரெக்ஸிற் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கணிசமான பொருளாதார- அரசியல் இடர்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் வர்த்தகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், பிறரைவிட பிரித்தானியாவே கடுமையாக பாதிக்கப்படும்.

ஜேர்மன் நிறுவனங்கள்; பிரித்தானியாவிற்கு வலுவான ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் முறையற்ற பிரெக்ஸிற்றை தடுப்பதில் ஜேர்மன் அரசாங்கமும் தலையிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், பிரெக்ஸிற்றினால் பாதிக்கப்படக் கூடிய நிறுவனங்களுடன் எமது அமைச்சு மிகவும் நெருக்கமாக செய்பட்டு வருகிறது. அதன்படி நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !