பிரெக்சிற் சட்டமூலத்தில் மாற்றங்கள் வேண்டும் – மைக் ரஸ்செல்

ஸ்கொட்லாந்தின் அதிகாரங்களை தக்கவைக்கும் வகையில், பிரெக்சிற் சட்டமூலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது குறித்து ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் ஸ்கொட்லாந்தின் பிரெக்சிற் அமைச்சர் மைக் ரஸ்செல் (Mike Russell) தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரித்தானியாவுக்கான அதிகாரத்தை மீளப்பெறும் நடவடிக்கையே பிரெக்சிற் எனவும் ஆனால் அவ்வாறு பெறப்படும் அதிகாரங்கள் ஸ்கொட்லாந்து போன்ற ஏனைய நிர்வாகங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.

அதனால், பிரித்தானியாவின் ஆளுமைக்கு ஸ்கொட்லாந்து உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இருப்பினும், ஸ்கொட்லாந்திற்கான அதிகாரங்களை பிரெக்சிற் வாரி வழங்கும் என ஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் முன்டெல் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !