பிரெக்சிற்றுக்கு பின்னரும் பிரித்தானியா நேர்மையாக நடத்தப்படும்-மேர்க்கல் உறுதி

பிரெக்சிற்றுக்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரித்தானியா நேர்மையாக நடத்தப்படும் என்று ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான விலையை பிரித்தானியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பிரெக்சிற் விவகாரம் குறித்து கலந்துரையாடும் போதே மேர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தொழிலாளர்கள், மக்களின் நகர்வுச் சுதந்திரத்தினை ஏற்றுக் கொள்வதற்கு பிரித்தானியா தயாராக இல்லை. உள்நாட்டு சந்தையின் நான்கு அடிப்படை சுதந்திரங்களை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றால் இத்தகைய விடயங்களை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது குறித்து அவதானிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !