பிரெக்சிற்றிற்கு பின்னரான பாதுகாப்பு ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எச்சரிக்கை

பிரெக்சிற்றிற்கு பின்னரான பாதுகாப்பு பிரகடன உடன்படிக்கையை தடை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்தால், அது பொது பாதுகாப்பை பாதிக்கும் என பிரதமர் தெரேசா மே எச்சரிக்கவுள்ளார்.

முனிச்சில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில், உலகத்தலைவர்கள் மத்தியில் இவ் எச்சரிக்கையை பிரதமர் விடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரஸ்சல்ஸுடனான பிரித்தானியாவின் எதிர்கால உறவு பற்றிய பிரதான உரையில் பிரதமர் ஒரு விரிவான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கான தனது நிபந்தனையற்ற தீர்மானத்தை முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய நீதிபதிகள் மற்றும் பிற நிறுவனங்களின் முக்கிய நபர்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரிக்கவுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !