பிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு- இளங்கோவன்

பிரியங்கா காந்தி வருகையால் மோடி அரசுக்கு பாதிப்பு ஏற்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற விழாவின் போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது கிராமப்புற விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் பிரதமர் மோடி அரசியலில் சரியாக அமுல்படுத்தப்படவில்லை.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவிலுள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் வருகையால் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆடிப்போய்யுள்ளது.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு உங்கள் வாக்கினை செலுத்த வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !