பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பா.ஜ.க.-விற்கு நெருக்கடி: கருத்துக்கணிப்பு

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான நன்மை கிடைக்குமென 50 சதவீதமானோரும், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென 24 சதவீதமானோரும் கூறியுள்ளனர். இதேவேளை, பிரியங்காவின் வருகையால் பா.ஜ.க.வின் வாக்குவங்கியில் குறிப்பிடதக்களவு சரிவு ஏற்படுமென 52 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23ஆம் திகதி ராகுல்காந்தி அறிவித்திருந்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா தமக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இதற்கமைய  அம்மாநில நிர்வாகிகளை அழைத்து முதல் கட்ட கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார். நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்கா உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !