பிரித்தானிய வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு இன்று!

பிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

பிரதமர் தெரேசா மேயுடைய வாக்குறுதிகளுக்கு இணங்க, நிதியமைச்சர் ஃபிலிப் ஹம்மோன்ட் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பாரா என எதிர்பார்ப்புக்களுடன் பொதுமக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்பார்ப்புக்களுடன் மாத்திரமுள்ள மக்கள் தற்போதும் அதே எதிர்பார்ப்புக்களுடன் அறிக்கை சமர்ப்பிப்பிற்காக காத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் தெற்குப் பகுதியில் பொதுசேவைகளிலும் வசதிகளிலும் அதிக குறைபாடுகள் காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வெஸ்மினிஸ்டர் பிராந்தியத்திலுள்ள மக்கள் உட்கட்டமைப்பில் பாரிய குறைபாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

எனினும், இதனைச் சீரமைக்க அரச திறைசேரியில் நிதியில்லையென குடியிருப்பாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் ஆளுங்கட்சிச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பிரதமர் தெரேசா மே, கடந்த தசாப்தமாக நாடு நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டு மக்களின் கடின உழைப்பே அதனையொழிக்க ஒரே வழியெனவும் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !